
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப் போட்டி நாளை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது. மேலும் இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன்களான விராட் கோலி, இஷான் கிஷன், சுப்மன் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதேபோன்று பந்து வீச்சில் ஜடேஜா, முகமது சிராஜ், ஷமி ஆகியோர் உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்திய அணியில் அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்த போதிலும் ஆஸ்திரேலிய அணியில் வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளன. இதனால் இந்திய அணி வெற்றி பெறுவது பந்து வீச்சாளர்கள் கையில் தான் உள்ளது. இப்படி இந்திய அணி ஏற்கனவே வெற்றி பெறுவதற்கு இக்கட்டான சூழ்நிலை உள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
என்னது., ஜே ஜே பட ஹீரோயின் இவங்களா? ஆள் அடையாளமே தெரியாம இப்படி இருக்காங்களே!!
அதாவது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நெட் பயிற்சியில் ஈடுபட்ட போது இடது கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன் பின் இவர் பயிற்சியை மேற்கொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர் நாளைய போட்டியில் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இது குறித்து எந்த விதமான அறிவிப்பையும் தற்போது வரை இந்திய அணி வெளியிடவில்லை.