கோலியின் இடத்தை பறித்த ரோஹித், ஆனாலும் கிடைக்காத முதலிடம்., அப்போ யாரு தான் பர்ஸ்ட்??

0
கோலியின் இடத்தை பறித்த ரோஹித், ஆனாலும் கிடைக்காத முதலிடம்., அப்போ யாரு தான் பர்ஸ்ட்??
கோலியின் இடத்தை பறித்த ரோஹித், ஆனாலும் கிடைக்காத முதலிடம்., அப்போ யாரு தான் பர்ஸ்ட்??

சர்வதேச T20 போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ரோஹித் VS விராட்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி அபார வெற்றியை தனதாக்கி கொண்டனர். இந்த வெற்றியின் மூலம் ரோஹித், நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார். அதாவது சர்வதேச T20 போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தான் அதிக வெற்றிகளை குவித்து 2 வது இடத்தில் இருந்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்


ஆனால் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா தலைமையின் கீழ் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் அந்த இடத்திற்கு தற்போது ரோஹித் முன்னேறியுள்ளார். மேலும் ரோஹித், விராட் கோலி ஆகியோரின் கீழ் இந்திய அணி பல சர்வதேச T20 போட்டிகளில் விளையாடியுள்ளது.

என்ன மனுஷன் சார் நீங்க.., வெற்றிக்கு பிறகு ரோஹித் சர்மா செய்த காரியம்.., வைரலாகும் வீடியோ!!

அதன் படி ரோஹித் தலைமையின் கீழ் இந்திய அணி 33 போட்டிகளில் வெற்றி பெற்று 2ஆம் இடத்தில் உள்ளனர். இவருக்கு அடுத்தபடியாக விராட் 32 போட்டிகளில் வெற்றி பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளார். ஆனால் முன்னாள் கேப்டனான தோனி 42 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here