
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். மேலும் தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு ரசிக்கும் படி வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார் தனுஷ்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் படைப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மதுரை அருகே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை கிடைப்பதற்கு முன்னால் நடந்த சம்பவத்தை பற்றி இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் முறைப்படி அனுமதி கேட்காமல் குண்டுவெடிப்பு காட்சிகள் படமாக்கப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் ஷூட்டிங் ஒரு சில நாட்கள் தள்ளி போன நிலையில் மறுபடியும் அதே வேகத்துடன் ஷூட்டிங்கை தொடங்கினர் படக்குழுவினர். இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது தற்போது படத்தின் ஷூட்டிங் மதுரை அருகே அரிட்டாப்பட்டி என்ற கிராமத்தில் அரசாங்கத்திடம் அனுமதி வாங்காமல் குண்டுவெடிப்பு காட்சிகளை நடத்தியுள்ளனர். இதனால் அங்கிருந்த அக்கம்பக்கத்தினர் அரிட்டாப்பட்டி பாதுகாப்பு சங்கத்திடம் புகார் அளித்துள்ளனர். இதனால் தற்போது படத்தின் ஷூட்டிங் நிறுத்தும் அளவுக்கு சென்றுள்ளது.