
நடிகர் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தை குறித்து படக்குழுவினர் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளிட்டுள்ளனர்.
கேப்டன் மில்லர்:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என ஆல் கிரவுண்டிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டவர் தான் தணுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கடந்த மாதத்தில் இருந்தே படத்தோட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் பீரியட் பிலிமாக 1930 – 40 காலக்கட்டங்களில் நடிக்கும் சம்பவங்களாக இப்படம் உருவாகி வருவதால், ரசிகர்கள் மத்தியில் எக்கசக்க எதிர்பார்ப்புகள் இருந்து வருகிறது. இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது.
அதாவது கேப்டன் மில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஜூன் மாதமும், டீசர் ஜூலை மாதமும் வெளியிட இருப்பதாக போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.