புற்றுநோயாளிகளுக்கான நவீன சிகிச்சை முறை.., முதல் முதலாக மதுரை அரசு மருத்துவமனையில் அறிமுகம்!!!

0

உலக நாடுகளில் பெரும்பாலான மக்கள் கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோயால் உயிரிழந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் புற்றுநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் இதற்கான விழிப்புணர்வை மக்களிடையே பரப்பும் பொருட்டு பிப்ரவரி 4ம் தேதி உலக புற்றுநோய் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ கீமோதெரபி சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சை முறை கைகளில் உள்ள ரத்த நாளங்கள் வழியாக செலுத்தப்படுவதால் நோயாளிகள் மிகவும் அவதியுறுகின்றனர். இதனால் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப கீமோதெரபி மருந்தை “கீமோ போர்டு கருவி” மூலம் நோயாளிகளின் உடலில் செலுத்தி எளிய சிகிச்சை மேற்கொள்ள வழி வகுக்கப்பட்டுள்ளது.

ராதிகா சரத்குமார் ஜோடியின் unseen கிளிக்ஸ்., அடேயப்பா, எப்படி ஒரு அன்னியோன்யம்!!

அதன்படி தென் தமிழக ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த கீமோ போர்டு கருவி நேற்று (பிப்ரவரி 4) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவ்வகை சிகிச்சை முறை முதலமைச்சரின் விரைவான காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here