திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்.., VIP தரிசனம் ரத்து.., இனி வேகமாக சாமி தரிசனம் செய்யலாம்!!

0
திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்.., VIP தரிசனம் ரத்து.., இனி வேகமாக சாமி தரிசனம் செய்யலாம்!!
திருப்பதி பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்.., VIP தரிசனம் ரத்து.., இனி வேகமாக சாமி தரிசனம் செய்யலாம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் தினசரி அலைமோதி வருகிறது. இப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் தினசரி 70 ஆயிரத்திற்கும் அதிகப்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர். இதன் காரணமாக வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் பக்தர்கள் நிரம்பி சுமார் 3 கி.மீ தூரம் வரை தரிசனத்துக்காக காத்திருக்கின்றனர். பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி சிபாரிசு கடித தரிசனங்களை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் தரிசன நேரமானது பாதியாக குறைந்து உள்ளது. இலவச தரிசனத்தில் 36 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள் 18 மணி நேரத்தில் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் குவிந்து இருந்தாலும் குறைந்த நேரத்தில் தரிசனம் செய்து வருவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.ஏகப்பட்ட மக்கள் தரிசனத்திற்காக வந்திருந்தாலும், குறைந்த நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காணாமல் போன சுனைனா., தீவிர விசாரணையில் போலீசார்., திடுக்கிடும் தகவலால் போலீசார் அதிர்ச்சி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here