கனடாவின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்கும் ஜஸ்டின் ட்ரூடோ – உலக தலைவர்கள் வாழ்த்து!!

0

கனடாவின் பிரதமராக  ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார். இதனால் பல நாட்டு தலைவர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மூன்றாவது முறையாக பிரதமர்:

கனடா நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்த  ஜஸ்டின் ட்ரூடோவின் பதவிக்காலம் அண்மையில் முடிவு பெற்றது.  இதனை அடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்யும் தேர்தல் பற்றி சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.  ஆனால், இதில் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியை தோற்கடித்து லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ வெற்றி பெற்றதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 முதல் தொடங்கி தொடர்ந்து இவரே கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்தது குறிப்பிடத் தகுந்தது.  இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்காவிட்டாலும் கடந்த முறையைப் போன்று இந்த முறையும் சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ட்ரூடோ பிரதமராக பொறுப்பேற்கவுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here