ஊரடங்கு தளர்வுகளை நீக்கலாமா அல்லது மாற்றம் செய்யலாமா !!! – வினவிய முதல்வர் மு க ஸ்டாலின்

0
ஊரடங்கு தளர்வுகளை நீக்கலாமா அல்லது மாற்றம் செய்யலாமா !!! - வினவிய முதல்வர் மு க ஸ்டாலின்
ஊரடங்கு தளர்வுகளை நீக்கலாமா அல்லது மாற்றம் செய்யலாமா !!! - வினவிய முதல்வர் மு க ஸ்டாலின்

ஊரடங்கு தளர்வுகளை நீக்கலாமா அல்லது மாற்றம் செய்யலாமா !!! – வினவிய முதல்வர் மு க ஸ்டாலின்

சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்திய நிலையில் ஊரடங்கு தளர்வுகளை நீக்கலாமா அல்லது மாற்றம் செய்யலாமா என கூட்டத்தில் வினவியுள்ளார்.

கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். போர்க்கால அடிப்படையில் மக்களை பாதுக்காக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் சட்டமன்ற கட்சி தலைவர்களுடன் ஆன கூட்டத்தில் கூட்டத்தில் அவர் “அனைத்து கட்சிகளின் ஆலோசனைகளை பெறவே இக்கூட்டத்தில் இணைந்திருக்கிறோம்; எனது தலைமையிலான அரசில் வெளிப்படைத்தன்மை இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கவனத்தில் கொள்ளாமல் சிலர் வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகளை நீக்கலாமா அல்லது மாற்றம் செய்யலாமா என்பதை கட்சி பிரதிநிதிகள் கூறலாம் என வினவியுள்ளார். இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கலாமா என்பதை முடிவெடுக்க உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here