பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லையா ? – பெற்றோரை போய் சாகுங்கள் என்று கூறிய கல்வித்துறை அமைச்சர்!!!

0
பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லையா ? - பெற்றோரைபோய் சாகுங்கள் என்று கூறிய கல்வித்துறை அமைச்சர்!!!
பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லையா ? - பெற்றோரைபோய் சாகுங்கள் என்று கூறிய கல்வித்துறை அமைச்சர்!!!

பள்ளி கட்டணங்கள் அதிகம் வசூலித்து வருவது வழக்கம் அதுவும் நம் நாட்டில் அடிக்கடி புகார்கள் வருவது வழக்கம். இந்நிலையில் மத்திய பிரதேஷம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அதிக பள்ளி கட்டணம் வசூலிக்கிறார்கள் எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சரை பார்த்து புகார் அளித்துள்ளனர் மாணவர்களின் பெற்றோர்கள். அப்பொழுது அதில் ஒரு பெற்றோரை பள்ளி கட்டணம் கட்டமுடிவயில்லை என்றால் போய் சாகுங்கள் என்று கூறியுள்ளார், அவர் கூறியது இப்பொழுது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

பெற்றோரை சாக சொன்ன அமைச்சர்..

மத்தியபிரதேச மாநிலத்தில் அனைத்து பள்ளிகளிலும் அதிக பள்ளி கட்டணம் வசூலித்து வருவதாக தகவல் வந்தன, இதற்கான நடவடிக்கை எடுக்க கோரி கல்வித்துறை அமைச்சர் இண்டெர் சிங் பார்மரை சந்தித்தனர் மாணவர்களின் பெற்றோர்கள். கொரோனா ஊரடங்கால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் அதுமட்டுமில்லாமல் சரியான வேலைகள் இல்லை எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. தொழிலும் பெருமளவில் பின் தங்கியுள்ளோம். கொரோனா தொற்றால் பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை எனவே ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடக்கின்றன.

பெற்றோரை சாக சொன்ன அமைச்சர்..
பெற்றோரை சாக சொன்ன அமைச்சர்..

இந்தசூழலில் பள்ளி நிர்வாகங்கள் எங்களின் பாதிப்பை சற்றும் நினைத்துப்பார்க்காமல் அவர்கள் வசூலிக்கும் பழைய கல்வி கட்டணத்தை விட இந்த வருடம் உயர்த்தி கேட்ப்பது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது, எங்களால் அந்த அளவுக்கு இப்பொழுது இருக்கும் நிலைமையில் பள்ளி கட்டணத்தை கட்ட முடியாது இன்று மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் கிளம்பும் வேளையில் பெற்றோர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பெற்றோர் ஒருவர் அமைச்சரிடம் சரியான நடவடிக்கைகளை எடுங்கள் எங்களை அதிக பள்ளி கட்டணத்தை கட்ட சொன்னால் சாக்குவதை தவிர வேறு வழி இல்லையென்று கூறியுள்ளார், அதை கேட்ட அமைச்சர் சட்டென்று அந்த பெற்றோரரை பார்த்து பள்ளி கட்டணம் கட்ட முடியவில்லை என்றல் பொய் சாகுங்கள் என்று கூறி அவர்பாட்டு காரில் ஏறி சென்றார், கல்வித்துறை அமைச்சரே இப்படி கூறியது மத்தியபிரதேச மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here