சித்ராவின் ‘கால்ஸ்’ உடன் வெளியான 2 திரைப்படங்கள் – ரசிகர்கள் உற்சாகம்!!

0

கொரோனா தளர்வால் திரையரங்குகள் யாவும் திறக்கப்பட்ட நிலையில் மாஸ்டர் படத்திற்கு பிறகு இன்று தொடர்ந்து மூன்று படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒரே நாளில் வெளியான திரைப்படங்கள்:

கொரோனா காலத்தில் இருந்து மூடப்பட்ட திரையரங்குகளால் படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஏற்பட்ட தளர்வால் மறுபடியும் திறக்கப்பட்டது. திரையரங்குகள் திறக்கப்பட்டதிலிருந்து ரிலீசான மாஸ்டர் திரைப்படமே அதிக வசூலை பெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது அதிகப்படியான திரைப்படங்கள் ஓடிடியில் தான் வெளியாகி வருகிறது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பலரும் கடுமையாக கண்டனத்தை தெரிவிக்க தான் செய்தனர். பெரிய நடிகர்களே திரையரங்குகளில் படங்களை வெளியிட தயங்கும் நேரத்தில் தற்போது ஒரே நாளில் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி நடிப்பில் சங்கத்தமிழன், சித்ராவின் கால்ஸ் மற்றும் ஆர்.கே.சேகரின் வேட்டை நாய் போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.

‘என் மகனுடன் பேசி 3 மாதங்களுக்கு மேல் ஆகிறது’ – அப்பாவை கெஞ்ச வைக்கும் விஜய்!!

மாஸ்டர் படத்திற்கு பிறகு எந்த படமும் அவ்வளவாக வசூல் பெறவும் இல்லை. மேலும் இந்த படங்கள் குறைந்த முதலீட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. வேறு பெரிய நடிகர்களின் படமும் வெளியாகாததால் ஓரளவு திரையரங்குகளில் இந்த படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்க போகிறது என்பது தான் யோசனையாகவும் உள்ளது. சித்ராவின் கால்ஸ் திரைப்படத்திற்கு ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here