உலகின் 11 வது மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவெடுத்தது பைஜூஸ்…

0

சிபி இன்சைட்ஸ் வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 2021 நிலவரப்படி, பைஜூஸ் உலகின் 11 வது மிக மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

அதன்படி, பைஜூஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 16.5 பில்லியன் டாலராக உள்ளது. சுமார் 16 மில்லியன் டாலர் மதிப்புடன் பேடிஎம் நிறுவனம் பைஜூஸ் நிறுவனத்திற்கு அடுத்த படியாக உள்ளது. பிரபல இந்திய பன்னாட்டு கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ்,  தங்களுடைய பயன்பாட்டை 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த கற்றல் தளத்தின்  மூலம் சுமார் 2 மில்லியன் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இதே போன்று இந்தியாவின் பணக்கார பட்டியலில் பைஜூஸ் ரவீந்திரன் மற்றும் திவ்யா கோகுல்நாத் 46-வது இடத்தில் உள்ளனர். 2020-ன் நிலவரப்படி இவர்களது மொத்த சொத்து மதிப்பு 3.05 பில்லியன் டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 22.3 ஆயிரம் கோடி. தற்போது பைஜூஸ் உலகின் 11 வது மிக மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் நிறுவனமாக மாறியுள்ளது.

சிபி இன்சைட்ஸ் அறிக்கைபடி,ஜூன் 2021 நிலவரப்படி, TikTok-கின் தாய் நிறுவனமான சீன நிறுவனமான பைட்டான்ஸ் 140 பில்லியன் டாலருடன் உலகின் மிக மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் நிறுவனமாக உள்ளது. Paytm இன் தாய் நிறுவனமான One 97 கம்யூனிகேஷன்ஸ் 6 பில்லியன் டாலர் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.  இதை போல ரேசர்பே நிறுவனம் 3 பில்லியன் டாலர் மதிப்பீட்டைக் கொண்டுள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here