ஆன்லைன் வகுப்பால் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு..!

0
trump
trump

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களின் வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்படுவதால் வெளிநாட்டு மாணவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்க அரசு முடிவு..!

trump
trump

எப்-1, எம் -1 விசா பெற்று அமெரிக்கப் பல்கலைகழகங்களில் படிக்கும் மாணவர்கள் இனி ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடத்தப்படுவதால் தொடர்ந்து நாட்டில் தங்கி இருக்க முடியாது என்று அந்நாட்டு குடியேற்றம் மட்டும் சுங்க அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

8 லட்சம் இந்தியர்கள் குவைத்தை விட்டு வெளியேறும் அபாயம் – வெளிநாட்டு மசோதாவுக்கு ஒப்புதல்..!

இந்நிலையில் ஆன்லைனில் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்திருக்கும் மாணவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது ஆன்லைன் அல்லாத நேரடியாக கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி அல்லது பல்கலைக்கழங்களில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு இனி விசா வழங்கப்பட மாட்டாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here