உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு…, 3 பிரிவுகளில் டாப் 10 இடத்தை தக்க வைத்து இந்திய வீரர்கள் அசத்தல்!!

0
உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு..., 3 பிரிவுகளில் டாப் 10 இடத்தை தக்க வைத்து இந்திய வீரர்கள் அசத்தல்!!
உலக பேட்மிண்டன் தரவரிசை வெளியீடு..., 3 பிரிவுகளில் டாப் 10 இடத்தை தக்க வைத்து இந்திய வீரர்கள் அசத்தல்!!

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு வெளியிட்ட தரவரிசையில், மூன்று பிரிவுகளின் கீழ் டாப் 10 இடத்தை தக்க வைத்து இந்திய வீரர்கள் அசத்தி உள்ளனர்.

பேட்மிண்டன் தரவரிசை:

பேட்மிண்டன் உலக கூட்டமைப்பு (BWF), பேட்மிண்டனில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின், இளம் வீரரான லக்ஷ்யா சென் இந்த வருடத்தில், காமன்வெல்த் மற்றும் தாமஸ் கோப்பை இரண்டிலும் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியதால் டாப் 10 யில் நுழைந்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் தொடர்ச்சியாக, பாரிஸ் ஓபனில் சிறப்பாக செயல்பட்டதால், 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரை போல, இந்திய நட்சத்திர வீரர்களான கிடாம்பி ஸ்ரீகாந்த் மற்றும் எச்.எஸ்.பிரணாய் 11வது மற்றும் 12 வது இடத்தில் உள்ளனர். மகளிருக்கான ஒற்றையர் பிரிவில் பி வி சிந்து தொடர்ந்து 6வது இடத்தை தக்க வைத்துள்ளார்.

வெண்ணிலாவை அடைய துடிக்கும் மாதவனின் முகத்திரையை கிழித்த சூர்யா.., உண்மை வெளிவருமா?? காற்றுக்கென்ன வேலி ட்விஸ்டு!!

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், பிரெஞ்சு ஒபனை கைப்பற்றிய சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி தொடர்ந்து 7 வது இடத்தில் உள்ளனர். இந்த தரவரிசையில், மகளிருக்கான இரட்டையர் பிரிவில், 23 வது இடத்தில் இருந்து 19 வது இடத்துக்கு இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் ஜோடி முன்னேறியுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில், 24 வது இடத்தில் இந்தியாவின் இஷான் பட்நாகர் மற்றும் தனிஷா க்ராஸ்டோ ஜோடி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here