தமிழகத்தில் 2வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் – பொதுமக்கள் கடும் அவதி!!

0

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக இன்று இரண்டாவது நாளாக பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

போக்குவரத்து ஊழியர்கள்:

தமிழகத்தில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். தற்போது இவர்களது கோரிக்கை குறித்து அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில் ஊழியர்கள் தங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். மேலும் நேற்று மதுரையில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே பேருந்துகளை இயக்கினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பேருந்துகள் குறைவாக இயங்கிய காரணத்தினால் மக்கள் ஆட்டோ மூலம் பயணம் செய்து வந்தனர். மேலும் சிவகங்கை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதேபோல் திண்டுக்கல் பகுதியில் 70 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. மேலும் கிருஷ்ணகிரி, ஓசூர் பணிமனையில் இருந்து மிக குறைந்த அளவில் தான் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனால் அங்கு வேலைக்கு செல்லும் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். மேலும் தஞ்சை பகுதிகளில் வெறும் 14 பேருந்துகள் மட்டுமே இயங்கின.

சுத்தோ சுத்துன்னு சுத்தும் இன்டர்நெட் – நெட்ஒர்க் சேவையில் பின்னுக்கு தள்ளப்பட்ட இந்தியா!!

மயிலாடுதுறையில் இருந்து வெளியூருக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளியூருக்கு திரும்பும் மக்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் நெடுஞ்சாலைத்துறை, காவல் துறையினரின் வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நேற்று போல் இன்றும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை உணர்ந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here