பேருந்து விபத்தில் 22 பயணிகள் இறப்பு.. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் தண்டனை – 6 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த தீர்ப்பு!!

0
Close-up Of Male Judge In Front Of Mallet Holding Documents

மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து விபத்தில் 22 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த ஓட்டுனருக்கு 190 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

190 ஆண்டு சிறை தண்டனை :

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு, பண்ணா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தின் ஓட்டுநர் மிக வேகமாக பேருந்தை இயக்கியுள்ளதால் பயணிகள் மெதுவாக செல்ல சொல்லி வற்புறுத்தி உள்ளனர். இருப்பினும் கேட்காத ஓட்டுநர் ஷம்சுதீன் வேகமாக பேருந்தை ஓட்டியதால், வறண்ட ஆற்றுப் பகுதியில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22 பேர் இறந்தனர். மேலும் இந்த பேருந்தில், அவசர வழியை அடைத்து கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

 

இது குறித்த வழக்கில், தீர்ப்பளித்த நீதிமன்றம், 19 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, பிரிவுக்கு 10 ஆண்டு வீதம் பேருந்து ஓட்டுநருக்கு 190 ஆண்டு சிறை தண்டனையும், பேருந்து உரிமையாளருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. இந்தியாவில், விபத்தில் சிக்கிய ஒரு ஓட்டுனருக்கு இவ்வளவு அதிகமான ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பது இதுவே முதல் முறை என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here