“புரெவி” புயல் எதிரொலி – இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

0

“புரெவி” புயல் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

“புரெவி” புயல்:

கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் தேதி வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியது. இது கடந்த இரு தினங்களுக்கு முன் காற்றழுத்த தாழ்வு மண்டலாக உருவாகி தற்போது “புரெவி” புயலாக உருவாகியுள்ளது. இந்த புயல் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி கடல் வழியாக கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த புயல் 18 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் இந்த புயலினை எதிர்கொள்ளும் விதமாக பல பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மற்றும் சென்னை மாவட்டங்களில் விமான சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒரு நாள் விடுமுறை!!

காரைக்கால் மாவட்டத்தின் ஆட்சியராக அர்ஜுன் சர்மா இன்று ஒரு உத்தரவினை பிறப்பித்துள்ளார். இதில் காரைக்காலில் செயல்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியாளர்களையும் களத்தில் இறக்கியுள்ளனர்.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு!!

காரைக்கால் மாவட்டத்தில் புயல் எதிரொலியாக தொடர்ந்து காலை முதல் கனமழை பெய்து வருகின்றதஹு. இதனால் பல பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தாழ்வான மற்றும் இணைப்பு பகுதிகளில் கனமழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here