மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்த பும்ரா…, அப்போ ஐபிஎல்லில் களமிறங்குவாரா??

0
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்த பும்ரா..., அப்போ ஐபிஎல்லில் களமிறங்குவாரா??
மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்த பும்ரா..., அப்போ ஐபிஎல்லில் களமிறங்குவாரா??

இந்தியாவின் நட்சத்திர வீரரான பும்ரா, அறுவை சிகிச்சைக்கு பிறகு முதன் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

பும்ரா:

இந்தியாவின் முன்னணி மற்றும் டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட்டான பும்ரா, கடந்த சில மாதங்களாக, முதுகு வலியால் அவதிக்கு உள்ளாகி இருந்தார். இதனால், இவரை பரிசோதித்த பிசிசிஐயின் மருத்துவ குழு, இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டால், தான் சிறந்த பலன் அளிக்கும் என கூறப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் இவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என தகவல் வெளியாகி இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த அறுவை சிகிச்சை காரணமாக பும்ரா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, ஐபிஎல் உள்ளிட்ட பல தொடர்களை இழக்க வேண்டி இருக்கும் என கூறப்பட்டது. இதன் பிறகு பும்ராவின் உடல் நிலை குறித்த எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில், நேற்று மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியை நேரில் காண பும்ரா சென்றுள்ளார்.

WPL 2023: முதல் சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய மும்பை இந்தியன்ஸ்…, வரலாறு படைத்து அசத்தல்!!

இதில், பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியை சப்போர்ட் செய்யும் நோக்கில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை, மும்பை இந்தியன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பும்ராவின் ரசிகர்கள் விரைவில் ஐபிஎல் மற்றும் சர்வதேச அணியில் களமிறங்க வேண்டி “COME BACK பும்ரா” என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mumbai Indians (@mumbaiindians)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here