இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பவுலரான ஜஸ்பிரித் பும்ரா அறுவை சிகிச்சை முடித்து பல மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்பி இருக்கிறார். அந்த வகையில், பும்ரா தலைமையில் அயர்லாந்துக்கு சென்று T20 தொடரில் விளையாடிய இந்திய அணி தொடரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மீண்டும் தனது உடற்தகுதியை உறுதி செய்த பும்ரா இப்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில், இந்தியா மற்றும் நேபாள அணிகள் மோதும் ஆசிய கோப்பை போட்டியில் இருந்து பும்ரா விலக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, தனிப்பட்ட காரணங்களுக்காக பும்ரா நேபாளத்திற்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் இருக்க மாட்டார் எனவும், சூப்பர் 4 சுற்றுகளின் போது அவர் மீண்டும் அணிக்குத் திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.