இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இணைந்த பும்ரா…, அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிசிசிஐ!!

0
இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இணைந்த பும்ரா..., அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிசிசிஐ!!
இலங்கைக்கு எதிரான இந்திய அணியில் இணைந்த பும்ரா..., அதிகாரபூர்வமாக வெளியிட்ட பிசிசிஐ!!

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாட திட்டமிட்டிருந்தது. இந்த திட்டத்தின் படி, இன்று முதல் டி20 போட்டியை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டி20 போட்டிகள் ஜனவரி 7ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஜனவரி 10, 12 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் தொடர்கள் நடைபெற இருக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான இரு தொடருக்கும் இந்திய அணியை பிசிசிஐ ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது, ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய தொடர்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெத் ஓவர் ஸ்பெசலிஸ்ட் பும்ராவை அணியில் சேர்த்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இவர் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியால் முழு உடற் தகுதி பெற்றதன் மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.

T20 போட்டியில் சாதித்த இந்தியா…, இலங்கைக்கு எதிராக இத்தனை வெற்றிகளா?? முழு விவரம் உள்ளே!!

இலங்கை ஒருநாள் போட்டிகளுக்கான மேம்படுத்தப்பட்ட இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here