ரொம்ப கொடுமை தான்.. பல நாள் கனவு கைகூடாமல் இறந்த பாடகர் பம்பா பாக்யா – நொந்து போன ரசிகர்கள்!

0
ரொம்ப கொடுமை தான்.. பல நாள் கனவு கைகூடாமல் இறந்த பாடகர் பம்பா பாக்யா - நொந்து போன ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி ஹிட் கொடுத்த பம்பா பாக்யா இன்று காலை மாரடைப்பால் மரணித்தார். இந்நிலையில் இவரின் நீண்ட நாள் ஆசை பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

பாடகர் பம்பா பாக்யா:

விக்ரம் ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான படம் ராவணன். இப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் அளித்த வாய்ப்பால் பாடகராக உருவெடுத்தவர் பம்பா பாக்யா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் பின்னர் தொடர்ந்து பல பாடல்களை தமிழில் பாடினார்.

இவர் சர்கார், பிகில், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் என தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். ஏராளமான பாடல்களை தொடர்ந்து பாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவர் பாடி இருந்தாலும் இவருக்கு அஜித் படத்தில் பாட வேண்டும் என்ற ஆசை இருந்ததாம். இதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருப்பார். தற்போது அந்த ஆசை கைகூடும் முன்னரே இவர் இறந்துவிட்டது சோகமான விஷயம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here