“இந்த பட்ஜெட் எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது” – நெசவாள சங்க பொருளாளர் வேதனை!!!

0
"இந்த பட்ஜெட் எங்களுக்கு ஏமாற்றமளிக்கிறது" - நெசவாள சங்க பொருளாளர் வேதனை!!!

2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல வரவேற்க கூடிய பட்ஜெட் இருந்தாலும் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவித சலுகைகளும் இல்லை என முன்னாள் நெசவாளர் சங்க பொருளாளர் சிங்காரம் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கடந்த 2014ம் ஆண்டு வரை ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நல்ல முறையில் இருந்தது. அதற்கு பிறகு நெசவாளர் வளர்ச்சிக்கான பட்ஜெட் ஒதுக்கப்படவில்லை. இதனால் தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை படிப்படியாக உயர்ந்து கடந்த மே மாதத்தில் ரூ.1,05,000 என எகிறியது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டன.

முதன் முதலாக குழந்தையை கருவில் சுமக்கும் மூன்றாம் பாலின தம்பதி.., கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

இதன் காரணமாக பஞ்சு விலை குறைப்பு, நெசவாளர் சலுகை, வெளிநாடு ஏற்றுமதி போன்ற திட்டம் குறித்து இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும் என எதிர்பார்த்தோம். வழக்கம் போல் இம்முறையும் ஜவுளி உற்பத்தியாளர்கள் மத்தியில் ஏமாற்றம் அளித்துள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here