மத்திய  பட்ஜெட் 2024..,  குறைந்த விலையில்  கேஸ் சிலிண்டர்.., நிர்மலா சீதாராமன் உரை!!

0
மத்திய  பட்ஜெட் 2024..,  குறைந்த விலையில்  கேஸ் சிலிண்டர்.., நிர்மலா சீதாராமன் உரை!!
2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று காலை 11 மணி அளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட் பற்றி ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார். இத்துடன் எங்களது நலத்திட்டங்கள் மூலம் அடுத்த 10 ஆண்டுக்கு நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் எனவும் கூறியுள்ளார்.
மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முடிவில் விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் பல நல்ல திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் ஊழல் ஒழிப்பையும், வாரிசு அரசியலையும் நாங்கள் எதிர்த்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இது தவிர அனைவருக்கும் வீடு, குடிநீர் வசதி, குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் போன்ற பயனுள்ள வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here