பட்ஜெட் 2023 : விவசாயிகளுக்கு பம்பர் லாட்டரி., PM கிசான் உதவித்தொகை இவ்ளோ உயர போகுதா?

0
பட்ஜெட் 2023 : விவசாயிகளுக்கு பம்பர் லாட்டரி., PM கிசான் தொகையை இவ்ளோ உயர போகுதா?
பட்ஜெட் 2023 : விவசாயிகளுக்கு பம்பர் லாட்டரி., PM கிசான் உதவித்தொகை இவ்ளோ உயர போகுதா?

மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், PM கிசான் உதவித்தொகை பெறும் விவசாயிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு ஒன்று வெளியாக வாய்ப்புள்ளது.

குவியும் எதிர்பார்ப்பு :

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டிற்கான காகிதமில்லா பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தற்போது இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் சார்ந்த முக்கிய திட்டத்தின் உதவித்தொகை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது, பாரத பிரதமரின் கிசான் என்ற திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000, மூன்று தவணைகளாக ரூபாய் 2000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின் 13-வது தவணைத் தொகை விரைவில் விடுவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் வரும் பட்ஜெட்டில் இந்த தொகையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதாவது ரூபாய் 2000 அதிகரித்து, உதவித்தொகையை ரூபாய் 8000 ஆக மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் இந்த தொகை உயர்த்தப்பட்டால் 4 தவணையாக 3 மாத இடைவெளியில் இந்த தொகை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இது சார்ந்த எதிர்பார்ப்பு தற்போது விவசாயிகளிடையே அதிகரித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here