Wednesday, April 24, 2024

சுதந்திர தின கொண்டாட்டம் – பிஎஸ்என்எல் ரூ.147 திட்டம் அறிமுகம்!!

Must Read

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) அதன் சென்னை வட்டத்தில் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 10 ஜிபி டேட்டா உள்ளிட்ட பல சலுகைகளுடன் புதிய ரூ.147 வவுச்சரை அறிமுகம் செய்துள்ளது. தவிர ரூ.1999 திட்டம் உட்பட பல வவுச்சர்களின் மீது கூடுதல் நன்மைகளை அறிவித்துள்ளது.

திரும்பப் பெறும் திட்டங்கள்:

உடன் பதஞ்சலி திட்டங்கள் உட்பட பல்வேறு வவுச்சர்களை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாகவும் பிஎஸ்என்எல் அறிவித்தது. புதிய திட்டமும், புதிய திருத்தமும்2020 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என கூற ப் பட்டு உள்ளது.

நன்மைகள்:

அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல், அதன் சென்னை வட்டத்தில் ரூ.147 திட்டத்தின் மூலம் வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்புடன், ஹோம் தேசிய ரோமிங் நன்மையையும் வழங்குகிறது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

bsnl 147 plan
bsnl 147 plan

குறிப்பிட்ட 250 நிமிடங்களுக்கு அப்பால் அடிப்படை கட்டணத்தின் கீழ் பணம் வசூலிக்கப்படும். ஆக ஒரு நாளைக்கு 250 குரல் நிமிடங்கள் வரையிலாக வரம்பற்ற அழைப்பு நன்மைகளை அனுபவிக்கலாம் என்று அர்த்தம்.

10 ஜிபி டேட்டா:

கூடுதலாக, ரூ.147 வவுச்சர் ஆனது பயனர்களுக்கு 10 ஜிபி டேட்டாவையும், இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களையும் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது.

வெப் சீரிஸ்கள் எடுக்க இனி சான்றிதழ் பெற வேண்டும் – பாதுகாப்பு அமைச்சகம்!!

இதேபோல ரூ.247 வவுச்சரை 2020 ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31 க்குள் ரீசார்ஜ் செய்தால் ஆறு நாட்களுக்கு கூடுதல் செல்லுபடி கிடைக்கும் என்றும் பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

ரூ.247 வவுச்சர்:

ரூ.247 வவுச்சர் ஆனது வரம்பற்ற அழைப்பு வசதியையும் 3 ஜிபி தினசரி டேட்டாவையும் 30 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் இந்த ரூ.247 வவுச்சர் இப்போது ஈரோஸ் நவ் சேவையையும், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சேவைக்கான அணுகலையும் வழங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரயில் பயணிகளுக்கு ஷாக்., கோவை வழி செல்லும் இந்த 8 ரயில்கள் ரத்து? தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

இந்தியாவில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு வழித்தடங்களிலும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் காசிபேட் to விஜயவாடா...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -