அண்ணன் அகிலனும், தம்பி கண்ணனும் – ஒரு குட்டிக்கதை!!

0

ஒரு மாலைப்பொழுதில், அகிலனும் கண்ணனும் விளையாடி கொண்டிருந்தார்கள். அப்போது சிறிதுநேரம் இளைப்பாறினார்கள்.  அப்பொழுது அவர்கள் பேசும் சின்னசின்ன தகவல்கள் மூலம் ஆங்கிலத்தை அறிந்து கொள்ள உதவும் ஒரு குட்டிக்கதை இது.

கண்ணன் வினவினான் அகிலனிடம், அண்ணா! எனக்கு ஒரு சந்தேகம்! எங்கள் ஆங்கில ஆசிரியர் வார்த்தைகளை பற்றி பாடம் நடத்தினார். சரி! அதில் நீ என்ன கற்றுக்கொண்டாய்? என்று கேட்டான், அகிலன். அவர் கூறினார், ‘எழுத்துக்களின் தொகுப்பு வார்த்தை’ என்றார். மேலும், அவர் கூறினார், பேசும் பொழுது சொற்களை சரியாக பயன்படுத்த வேண்டும்.

சீனாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைக்கு பிரேசில் அனுமதி..!

ஆசிரியர் சொன்னார், “First choose your words and select the word from it”. எனக்கு ஒன்றும் புரியவில்லை. அண்ணா! உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? என்று கேட்டான், கண்ணன். அகிலன், அதற்கு கூறினான், கண்ணா! முதலில் நாம் சில வார்த்தைகளை (choose) தேர்வு செய்ய வேண்டும். பின்னர், அந்த சில வார்த்தைகளில் இருந்து மிகச் சரியான ஒரு வார்த்தையை (select) தேர்ந்தெடுக்க வேண்டும்.

உனக்கு ஒரு உதாரணமும் தருகிறேன், என்றான் அகிலன்.
வினா:
Arjun (started/begun) speaking at the age of two. (baby)
Arjun (started/begun) speaking at two o’ clock. (Chairman)

அண்ணா! நான் விடை கூறுகிறேன், என்றான் கண்ணன். சரி! கூறு பார்ப்போம், என்றான் அகிலன். முதல் வினாவிற்கு விடை, ‘Arjun started speaking at the age of two’. இரண்டாவது வினாவிற்கு விடை, ‘Arjun begun speaking at two o’clock’, என்று விடை அளித்தான், கண்ணன். உன்னுடைய விடை சரி தான், கண்ணா! ஆனால் ஏன் அந்த வார்த்தையை தேர்ந்தெடுத்தாய்? என்று கேட்டான், அகிலன்.

சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை – அமைச்சர் கடம்பூர் ராஜு!!

எனக்கு காரணம் தெரியவில்லை, என்றான் கண்ணன். அதற்கு அகிலன் விளக்கம் அளித்தான், முதல் வினாவில் அர்ஜூன் குழந்தை மற்றும் அந்த வயதில் தான் பொதுவாக அனைவரும் பேச ஆரம்பிப்பார்கள் . சரியான நேரத்தில் செய்ய வேண்டிய செயலை குறிப்பிட ‘start’ எனும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.

இரண்டாவது வினாவில் அர்ஜூன் சேர்மன் மற்றும் அந்த வயதில் நாம் எப்போது வேண்டுமானாலும் பேசலாம். நமக்கு தாராளமாக நேரம் இருக்கும் போது ஒரு செயலை செய்ய, அதை குறிப்பிட ‘begin’ எனும் சொல்லை பயன்படுத்த வேண்டும்.

இப்பொழுது எனக்கு புரிகிறது, என்றான் கண்ணன். கண்ணா! நேரமாயிற்று இருவரும் வீடு திரும்பலாம், என்றான். அன்றைய மாலைப்பொழுது, இனிதே நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here