அண்ணியை கல்யாணம் செய்து கொண்ட கொழுந்தன் – கடைசியில் கொடுமை தாங்காமல் தற்கொலை!!

0
suicide
suicide

தனது அண்ணனை இழந்த அண்ணியை காதலித்து மறுமணம் செய்த கொழுந்தனின் வரதட்சணை கொடுமை தாங்காமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் தற்கொலை:

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் தன் கணவன் இறந்து போனதால், கணவனின் தம்பியான கொழுந்தனை காதலித்து மறுமணம் செய்துள்ளார் அந்த இளம்பெண்.  தான் இரண்டாவதாக மணந்து கொண்ட அந்த நபர் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில்,  அந்த இளம்பெண் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார்.  வரதட்சணை கொடுமை தாளாமல் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, 120 சவரன் நகைக்காகவே அண்ணனின் மனைவியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என்று கந்துவட்டி மாப்பிள்ளையான தம்பி தெரிவித்துள்ளார்.  மறுமணம் செய்து கொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here