பிரிட்டன் ராணி எலிசபெத் இறப்பிற்கு பிறகு செய்ய வேண்டியவை – முக்கிய தகவலை வெளியிட்ட அமெரிக்க நிறுவனம்!

0

பிரிட்டனின் ராணி எலிசபெத் அவர்களின் இறப்புக்கு பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை அமெரிக்காவைச் சார்ந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தகவல் வெளியீடு:

பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் உள்ளார்.  இதற்கு முன் ராணியான எலிசபெத்தின் ஆட்சி அங்கு நடைபெற்றது குறிப்பிடத் தகுந்தது.  உலகம் முழுவதும் பரவி இருந்த கொரோனா வைரஸ் தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராணி எலிசபெத் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்து அரண்மனை திரும்பினார்.  இதனை அடுத்து அரண்மனை வாரிசுகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் அனைவரும் அரண்மனையிலே தங்களை சுய தனிமைப்படுத்தி கொண்டதாக அறிவித்தனர்.  இதன் பின், இவர்கள் அனைவரும் தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு குணமடைந்தனர்.இந்நிலையில் ராணி எலிசபெத் சார்ந்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  அதாவது, வயது முதிர்வில் உள்ள ராணி இறந்த பிறகு, அவரது உடல் 10 நாட்கள் கழித்து தகனம் செய்யப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் தகனம் செய்யப்படுவதற்கு முன், அடுத்ததாக அரியணையில் ஏறப் போகும் ராணியின் பரம்பரையைச் சேர்ந்த இளவரசர் சார்லஸ் பிரிட்டனில் நான்கு நாள் சுற்றுப் பயணம் செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாராளுமன்ற வளாகத்தில் ராணியின் உடல் மூன்று நாட்கள் வைக்கப்படும் என்றும், அவரது உடலைப் பார்க்க பெருந்திரளான மக்கள் லண்டனை நோக்கி படையெடுக்க வாய்ப்பிருப்பதால் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகவும் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தும்  ஆபரேஷன் லண்டன் பிரிட்ஜ் என்று பெயரிடப்பட்டு, அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு இயங்கும் Politico என்னும் செய்தி நிறுவனத்துக்கு கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here