சுவையான கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி – இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ்!!

0
சுவையான கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி - இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ்!!
சுவையான கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி - இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ்!!

நம்மில் பலர் கத்திரிக்காயை வைத்து சாம்பார், புளிக்குழம்பு மட்டுமே செய்திருப்போம். ஆனால் அதை தாண்டி இந்த கத்திரிக்காயை வைத்து பல சமையல் வகைகள் செய்யலாம். இந்த பதிவில் கத்திரிக்காய் சட்னி எவ்வாறு செய்வது என்பது பற்றி காண்போம்.

வாட்சப் பயனர்களுக்கு எச்சரிக்கை.. திடீரென முடக்கப்பட்ட 18 லட்சம் கணக்குகள் – என்ன காரணம் தெரியுமா??

தேவையான பொருட்கள்:

கத்திரிக்காய் – 200 கிராம்

தக்காளி – 3

உருளைக்கிழங்கு – 1

பெ. வெங்காயம் – 1

ப. மிளகாய் – 1

காய்ந்த மிளகாய் – 4

கடுகு, உளுந்து – 1 டீஸ் ஸ்பூன்

எண்ணெய் – தே.அளவு

கருவேப்பில்லை – தே.அளவு

உப்பு – தே.அளவு

செய்முறை:

முதலில் குக்கரில் தண்ணீர் ஊற்றி கத்திரிக்காய், தக்காளி, உருளைக்கிழங்கு, ப. மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும். பின்னர் ஆவி அடங்கியதும் தக்காளியின் தோலை மட்டும் நீக்கி கொள்ளவும். தோல் நீக்கிய பின் மிக்ஸியில் இந்த கலவையை நன்கு அரைத்து கொள்ளவும்.

சுவையான கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி - இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ்!!
சுவையான கத்திரிக்காய் சட்னி செய்வது எப்படி – இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ்!!

இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கருவேப்பில்லை, காய்ந்த மிளகாய், நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் நாம் அரைத்து வைத்த கத்திரிக்காய் கலவையை தேவையான தண்ணீருடன் ஊற்றி எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து கெட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்பொழுது இட்லி தோசைக்கு சூப்பரான சைடு டிஷ் கத்திரிக்காய் சட்னி தயார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here