ஐபிஎல் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் – சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு கிடைத்த அங்கீகாரம்!

0
ஐபிஎல் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் - சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு கிடைத்த அங்கீகாரம்!
ஐபிஎல் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் - சர்வதேச கிரிக்கெட் வீரருக்கு கிடைத்த அங்கீகாரம்!

IPL 2023 போட்டிக்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பிரபல முன்னாள் சர்வதேச வீரர் பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி!

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்த ஆண்டு சீசனில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி இருந்து வந்தார். டாம் மூடியின் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அந்த அணியின் உரிமையாளர்கள் பயிற்சியாளரை மாற்ற திட்டமிட்டனர். அதன்படி ஹைதராபாத் அணிக்கு புதிய பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா நியமிக்கப்பட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

லாரா கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆலோசகராகவும் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை நடைபெற்ற IPL தொடர்களில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் IPL பட்டத்தை வென்றனர். அதன் பிறகு தற்போது வரை இறுதி போட்டிக்கு செல்ல முடியவில்லை.

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் 6 வெற்றிகள் மற்றும் 8 தோல்விகளுடன் எட்டாவது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் ஹைதராபாத் அணியின் உரிமையாளர்கள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா எதிர்வரும் காலங்களில் எங்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருப்பார் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிகாரப்பூர்வமாக இன்று ட்வீட் செய்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here