மொறுமொறு சுவையில்.., மீண்டும் மீண்டும் ருசிக்க தோன்றும், பிரட் முட்டை போண்டா!!

0
மொறுமொறு சுவையில்.., மீண்டும் மீண்டும் ருசிக்க தோன்றும், பிரட் முட்டை போண்டா!!
மொறுமொறு சுவையில்.., மீண்டும் மீண்டும் ருசிக்க தோன்றும், பிரட் முட்டை போண்டா!!

பொதுவாக ஸ்கூல் முடித்து வீட்டுக்கு வருகிற குழந்தைகள் evening time ஏதாச்சும் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புவார்கள். அதற்காக நாம் கடைகளில் ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்திருப்போம். ஆனால் இனி நம்ம வீட்டுலயே செம்ம டேஸ்ட்டா, சட்டுனு செய்யக்கூடிய ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்

  • முட்டை – 3
  • bread பாக்கெட் – 1
  • எண்ணெய் – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகு தூள் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம் ;

bread முட்டை போண்டா செய்வதற்கு 3 முட்டைகளை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இதன் பிறகு அந்த முட்டைகளை 2 டாக கட் செய்து அதில் மிளகாய் தூள், மற்றும் மிளகு தூள் ஆகியவற்றை தூவி கொள்ளவும். இப்போது நாம் வாங்கி வைத்துள்ள பிரட்களை நான்கு பக்கமும் நறுக்கு விட்டு அதன் நடுவில் இருக்கும் பிரட்டை தனியாக எடுத்துக் கொள்ளவும். மேலும் பிரட்டின் நான்கு ஓரத்தில் இருந்து கட் செய்து வைத்துள்ள அந்த துண்டுகளை மிக்ஸி ஜாரில் போட்டு லைட்டாக அரைத்து கொள்ளவும்.

பெற்றோருக்கு மகளாய் இருக்க ரூ.47000 சம்பளம்., வியக்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

அப்படி இல்லையென்றால் கடைகளில் bread crumps சை வாங்கி கொள்ளலாம். இப்போது நம் கட் செய்து வைத்துள்ள பிரட்டின் நடு பகுதியை தண்ணீரில் விட்டு எடுத்து, தட்டையாக பரப்பி கொள்ளவும். அதற்குள் முட்டையை வைத்து மூடிக்கொள்ளவும். இதன் பிறகு நாம் அரைத்து வைத்துள்ள bread crump க்குள் பிரட் முட்டையை பிரட்டி எடுக்கவும். இப்போது இதை எண்ணெயில் போட்டு பொரித்து சுவையான bread முட்டை போண்டாவை வீட்டில் இருப்பவர்களுக்கு serve செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here