ஒரே பிரசவத்தில் பிறந்த Twins – அம்மா ஒருத்தர், ஆனா அப்பா 2 பேர்! மருத்துவத்துறையில் வினோதம்!!

0
ஒரே பிரசவத்தில் பிறந்த Twins - அம்மா ஒருத்தர், ஆனா அப்பா 2 பேர்! மருத்துவத்துறையில் வினோதம்!!

ஒரே கருவில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் ஒருவர், ஆனால் தந்தை வேறு வேறு நபர் என்ற வினோத தகவல் மருத்துவ பரிசோதனையில் வெளியாகியுள்ளது.

மருத்துவத்துறை பகீர்:

பிரேசில் நாட்டில் அண்மையில் ஒரு தாய்க்கு, பிரசவம் நடந்தது. ஒரே கருவில் உருவான இரட்டைக் குழந்தைகள், ஒரே பிரசவத்தில் பிறந்தது. ஆனால், இந்த பிரசவத்தில் பிறந்த அந்த இரட்டை குழந்தைகளுக்கு  தாய் ஒருவர் என்பதும், தந்தை வேறு வேறு நபர்கள் என்பதும் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஒரே நாளில் இரண்டு தனிப்பட்ட நபர்களுடன் உறவில் இருந்ததால், இந்த வினோதம் நிகழ்ந்திருக்கலாம் என  அந்த குழந்தைகளின் தாய் தெரிவித்துள்ளார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

மருத்துவ ரீதியாக பார்க்கும் போது  இது பில்லியனில் ஒருவருக்கு மட்டுமே நிகழும் எனவும், இந்த முறைக்கு Heteropaternal Superfecundation என்று பெயர் எனவும் மருத்துவத் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளின், இந்த மாறுபட்ட தகவல் குறித்த கருத்துக்கள், சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here