உலக கோப்பை நேரத்தில் கால்பந்து ஜாம்பவானுக்கு வந்த சோதனை.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
உலக கோப்பை நேரத்தில் கால்பந்து ஜாம்பவானுக்கு வந்த சோதனை.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
உலக கோப்பை நேரத்தில் கால்பந்து ஜாம்பவானுக்கு வந்த சோதனை.., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாம்பவான் பீலே:

கத்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை பார்ப்பதற்காக பல லட்ச மக்கள் கத்தார் நாட்டில் குவித்துள்ளனர். இப்படி போட்டி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிரேசில் நாட்டை சேர்ந்த பீலே மிகப்பெரிய கால்பந்து ஜாம்பவானாக திகழ்ந்தார். இவர் மூன்று உலக கோப்பை வென்ற ஒரே வீரராகவும் வலம் வந்தார். ஏன் கால்பந்து போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்களில் 10 வது இடத்தில் உள்ளார். மேலும் அண்மையில் கூட பிரேசில் அணி கத்தார் உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையுடன் தாயகம் திரும்ப வேண்டும் என வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இப்படி பல சாதனைகள் செய்த இவருக்கு கடந்த வருடம் பெருங்குடலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால் 2021 செப்டம்பரில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு தொடர்ந்து கீமோதெரபி எடுத்து வந்துள்ளார். இதையடுத்து திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

ஆசிய கோப்பையில் இருந்து அதிரடியாக விலகிய இந்தியா.., BCCI போட்ட மாஸ்டர் பிளான்.., அதிர்ந்து போன பாகிஸ்தான் !!

இந்த செய்தி கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பீலேவின் மகள் கெலி நசிமென்டோ “தந்தை உடல்நிலை சரியாகி கொண்டு வருகிறது என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை அறிந்த கால்பந்து ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here