Thursday, April 25, 2024

காந்தி போல் வேடமணிந்து விழிப்புணர்வு – மாணவர் அசத்தல்!!

Must Read

கொரோனா பாதிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன் காந்தி போல் வேடமணிந்து சென்றது, மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுஉள்ளது.

கொரோனா பாதிப்பு:

கடந்த சில நாட்களாக பரவலாக எல்லா மாவட்டங்களிலும் கொரோனா நோய் தோற்று அதிகரித்து வந்துள்ளது. ஆனால் மக்கள் யாரும் எந்த கட்டுப்பாடுகளையும் கடைபிடிப்பதில்லை. அதனால், நோய் தோற்று இன்னும் அதிகமாக பரவி வருகிறது. இந்தனை கண்டா கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படிக்கிறார்.

karthick
karthick

அவர் மக்களுக்கு வித்தியாசமான நடையில் விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்று தன் பாட்டியுடன் காந்தி போல் வேடமணிந்து கரூரில் உள்ள தெருக்களில் நடந்து சென்று பிரச்சாரம் வழங்கி உள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று உள்ளது.

அவர் கூறியதாவது:

இது குறித்து கார்த்திக் கூறியதாவது ” எனக்கு மக்களுக்கு ஏதேனும் வித்தியாசமான முறையில் செய்ய வேண்டும் என்று தோன்றியது. மக்கள் சமீப காலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக பின்பற்றுவதில்லை, அதிலும் குறிப்பாக மெத்த படித்தவர்களே இதனை செய்வதில்லை என்பது தான் கவலை அளித்தது போல் உள்ளது. அதனால் தான் இந்த யோசனை.

karthick creating awareness
karthick creating awareness

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

“விழித்திரு, தனித்திரு, வீட்டிலிரு” என்ற வாசகங்கள் மக்கள் மனதில் எளிமையாக இருக்கும், கூடுதலாக மக்கள் அனைவரும் பின்பற்றுவார்கள் என்றும் நம்புகிறேன்” இப்படியாக அவர் தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -