பாக்ஸ் ஆபீஸ் டாப் ஹிட் படங்கள் லிஸ்ட்.., தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் விக்ரம்! ரசிகர்கள் வாழ்த்து!!

0

லாக்டவுனுக்கு பிறகு குறிப்பிட்ட சில கதாநாயகர்களின் படங்களை தவிர்த்து எந்த ஒரு படமும் தியேட்டரில் வசூலை பெறுவது கிடையாது. ஏனெனில் எல்லா திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் ஒளிபரப்படுவதால் தான் இந்த நிலைமை என்றே சொல்லலாம். இதனால் ஒரு பெரிய பிரச்சனைகளே ஏற்பட்டது. திரையரங்கு உரிமையாளர்கள் இதனால் போராட்டத்தில் கூட ஈடுபட்டனர்.

ஆனால் சில காலமாக அந்த ஒரு நிலைமை மாறிக்கொண்டுள்ளது. சமீபத்தில் சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. மீண்டும் திரையுலகம் பழைய ஃபார்மிற்கு வந்து கொண்டுள்ளது. இப்படி இருக்க இப்பொழுது பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டிய சில படங்கள் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால் தமிழ் படமான விக்ரம் தான் இதில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த இந்த திரைப்படம் 3 வாரங்களை கடந்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டுள்ளது. அதுவும் தமிழகத்தில் ரூ.165 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் ரூ.400 கோடி வசூலை பெற்று முன்னிலையில் உள்ளது.

புது காதலில் விழுந்த முன்னாள் கணவர் – இதுவரை இல்லாத அளவுக்கு சோகமான பதிவை வெளியிட்ட சமந்தா!

ஹிந்தியில் வெளியான ஜக் ஜக் ஜியோ குடும்ப கதையம்சத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதால் சூப்பர் ஹிட் அடித்தது. இந்த வருண் தவான், கியாரா அத்வானி, அனில் கபூர் மற்றும் நீது கபூர் போன்ற முக்கிய பிரபலங்கள் பலரும் நடித்து அசத்தியிருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி 2 நாளில் ரூ.15 கோடி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.

அடுத்ததாக தமிழில் வெளியான நம்ம வீட்டு விசேஷம் திரைப்படம் ஜூன் 17 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இப்பொழுது வரை 10 கோடி வசூலை பெற்று பாக்ஸ் ஆபீஸில் முன்னிலையில் உள்ளது. இந்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்கி ஊர்வசி, சத்யராஜ், அபர்ணா பாலமுரளி போன்றோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மாமனிதன். இந்த படத்தை சீனு ராமசாமி இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படம் வெளியான 3 நாட்களில் 3 கோடி வசூலை பெற்றுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here