தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துக்களை குறைப்பதற்காக வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதை மீறுவோருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது தர்மபுரி மாவட்டத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு அப்பகுதி போக்குவரத்து காவலர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர்கள் இணைந்து பட்டாசு பாக்ஸ் கிப்டாக வழங்கியுள்ளனர். மேலும் அவர்களிடம் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது