IND vs AUS: டெஸ்ட் அணியில் இணைந்த ஜடேஜா?? உடல் தகுதி குறித்து வெளியான தகவல்!!

0
IND vs AUS: டெஸ்ட் அணியில் இணைந்த ஜடேஜா?? உடல் தகுதி குறித்து வெளியான தகவல்!!
IND vs AUS: டெஸ்ட் அணியில் இணைந்த ஜடேஜா?? உடல் தகுதி குறித்து வெளியான தகவல்!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், இந்தியாவின் ஜடேஜா முழு உடல் தகுதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜடேஜா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் 9ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்காக, ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இந்திய அணிக்கு திரும்ப உள்ளனர். இவர்களுடன் ஜடேஜாவும் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆனால், ஜடேஜாவின் இடமானது, உடற்தகுதியை பொறுத்தே என பிசிசிஐ குறிப்பிட்டிருந்தது. இதனால், ஜடேஜா ஏதேனும் ஓர் உள்ளூர் தொடரிலாவது விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதன்படி, ஜடேஜா ரஞ்சி டிராபியில், தமிழ்நாடு அணிக்கு எதிராக களமிறங்கி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தினேஷ் கார்த்திக்?? வெளியான நியூ அப்டேட்!!

இதனை தொடர்ந்து, இவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) உடற்தகுதியை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம், ஜடேஜா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இந்திய அணியில் இணைந்தாலும், ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியில் விலகி இருப்பது பெரும் ஏமாற்றமாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here