பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை மையப்படுத்தி நூதன மோசடி – விழிப்புடன் இருக்க காவல்துறை அறிவுரை!!

0

கொரோனாவுக்கு எதிராக அரசு சார்பில் செலுத்தப்பட்டு வரும், பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசியை வைத்து சில சமூக விரோதிகள் மோசடி செயலில் ஈடுபட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

மக்களுக்கு எச்சரிக்கை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த  மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதில் முன் களப்பணியாளர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் வயதான நபர்களை வைத்து முக்கிய திருட்டு நடப்பதாக காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு முன் பதிவு செய்து தரும் சமூக ஆர்வலர்களாக தங்களை பாவித்துக் கொண்டு வரும் மோசடியாளர்கள் தடுப்பூசி செலுத்திய தேதியை சரியாகச் சொல்லி, நாங்கள் உங்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்து தருகிறோம் எனக்கூறி, அவர்களின் செல்பேசிக்கு வரும் ஒடிபி  எண்ணை தெரிவிக்குமாறு கேட்கிறார்கள்.

அதை சொன்னதும் அவர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் பறி போகிறது. இது குறித்து எச்சரித்துள்ள போலீசார் அரசு சார்பில், தொலைபேசியில் அழைத்து தடுப்பூசிக்கான எந்த ஒரு முன்பதிவும் செய்யப்படுவதில்லை எனவும், தேவைப்படும் மக்கள் கோவின் இணையதளம் அல்லது ஆரோக்கிய சேது செயலில் முன்பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here