கொரோனவை ஒழிக்க பூஸ்டர் டோஸ் தேவையா? – பளிச் என்று பதிலளித்த தமிழக அரசு!!

0

கொரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளும் செலுத்தி கொண்டவர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் 97.5 சதவிகிதம் பேருக்கு மீண்டும் தொற்று உறுதியாகவில்லை எனவும் இறப்பு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்ட சபையில் தெரிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து மனிதர்களை காக்கும் பேராயுதமாக விளங்குவது தடுப்பூசி மட்டுமே. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தடுப்பூசிக்கும், அதன் செயல்திறனை பொறுத்து அது எத்தனை டோஸ்களாக உடலில் செலுத்தப்படவேண்டுமென்ற வழிமுறை நிர்ணயிக்கப்படும்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த காதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 97.5 சதவிகிதம் பேருக்கு மீண்டும் தொற்று ஏற்படவில்லை என தெரிவித்தார்.

தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள்..

மேலும், பூஸ்டர் டோஸ் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் பல்வேறு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைத்திருப்பதாகவும், அந்த குழு இதுவரை அது தொடர்பான செயல்முறைகளை வழங்காத நிலையில் தமிழ்நாடில் மட்டுமல்ல இந்தியாவில் பிற மாநிலங்களில் கூட பூஸ்டர் டோஸ் தொடர்பான பணிகள் தொடங்கப்படவில்லை எனவும் மா.சுப்பிரமணியன் பதிலளித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here