மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ் – அமைச்சரவை ஒப்புதல்!!

0

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் சுமார் 30 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்காக 3,737 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பண்டிகைக்கால போனஸ்:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரிசெய்ய மத்திய நிதி அமைச்சகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், செலவினங்களை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைந்துள்ள காரணத்தால், போனஸ் மற்றும் வட்டியில்லா முன்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Prakash Javadekar
Prakash Javadekar

மிரள வைக்கும் வெங்காய விலை – பசுமை பண்ணைகளில் 45 ரூபாய்க்கு விற்பனை!!

2019-20ம் நிதியாண்டில் 30 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.3,737 கோடி போனஸ் வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். மேலும் போனஸ் இப்போதே உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் பொருளாதாரத்தில் நுகர்வு மேலும் அதிகரிக்கும் என்று அமைச்சர் கூறினார். போனஸ் ஒரு தவணையில், நேரடி வங்கி பரிமாற்றத்தின் மூலம், விஜயதசமிக்கு முன் வழங்கப்படும் என்று ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here