இந்தி திரையுலகில் கால் பதிக்க உள்ள அஜித்தின் வலிமை – போனி கபூர் போட்ட மாஸ்டர் பிளான்!!

0

நடிகர் அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தை  தமிழ் மொழியைப் போன்றே  இந்தியிலும் வெளியிட போனி கபூர் முயற்சி செய்து வருகிறாராம்.

தயாரிப்பாளரின் முயற்சி:

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வலிமை.   படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் இந்த படம் திரையரங்கத்தில்  வெளியாக உள்ளது.  இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது இந்த படம் தமிழில் வெளியாகும் அதே நாளில், இந்தியிலும், தெலுங்கிலும் வெளியிட முயற்சிகள் தற்போது நடந்து வருகிறது. போனி கபூர் அவர்களின் இந்த முயற்சியை கேள்விப்பட்ட ரசிகர்கள், தல அஜித்தை இந்தி திரைப்பட உலகில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here