பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., விசாரணையை துரிதப்படுத்திய போலீசார்., அடுத்தகட்ட நடவடிக்கை இதுதான்!!

0
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்., விசாரணையை துரிதப்படுத்திய போலீசார்., அடுத்தகட்ட நடவடிக்கை இதுதான்!!
சென்னையில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும்படி அவர்களது பெற்றோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன் பிறகு பள்ளிகளுக்குள் வெடிகுண்டு இருக்கிறதா என்பதை மோப்ப நாய்களுடன் காவல் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதை எடுத்து பள்ளிகளுக்கு இ மெயில் மூலம் கொடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் முற்றிலும் வதந்தி என தெரியவந்தது.
மேலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இமெயில் ஐடியை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் சைபர் கிரைம் உதவியை நாடியுள்ளனர். இதோடு ஏற்கனவே பள்ளிகளுக்கு மற்றும் பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் பட்டியலை சேகரிக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து யாரேனும் கைதாகியுள்ளனரா? என்ற தகவலையும் சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here