பிரபல நடிகர் திடீர் மறைவு – மருத்துவமனையிலேயே உயிர் பிரிந்த சோகம்!!

0

கொரோனா தாக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பாலிவுட் நடிகர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் மறைவு:

இந்தி திரை உலகத்தில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் யூசுப் உசேன்.  தூம் 2, ரோட் டூ சங்கம், தபாங் 3, ஓ மை காட், ஐ எம் சிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமாக திகழ்கிறார்.  73 வயதான இவர், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல், அவர் உயிர் பிரிந்ததாக அவரது மருமகன் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அவர் தனக்கு மாமனாராக மட்டும் நடந்து கொள்ளாமல், மிகச் சிறந்த தந்தையாக நடந்து கொண்டதாக உருக்கமாக பதிவிட்டுள்ளார்.  அவரது மறைவுக்கு, அபிஷேக் பச்சன், நடிகர் மனோஜ் பாஜ்பாய், பூஜா பட் உள்ளிட்ட பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  இவரது மறைவு திரை உலகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here