உடலின் இந்த பகுதிகளில் வலி ஏற்பட்டால் சாதாரணமாக நினைக்க கூடாது – ஏன் தெரியுமா??

0
body pain
body pain

பெரும்பாலானோர் உடல் வலியை சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் இதனை ஆரம்பத்திலே கவனிக்காமல் விட்டு விட்டால் பெரிய பிரச்சனையில் முடிந்து விடும். ஏனெனில் உடல் சரியாக இயங்காத போது தான் வலி ஏற்படுகிறது. ஆனால் உடலில் சில இடங்களில் ஏற்படும் வலியை ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவே கூடாது.

உடல் வலி

ஒருவர் மிக அலுப்பாக இருக்கும்போதோ அல்லது தசைகளில் அழுத்தம் ஏற்பட்டாலோ வலி ஏற்படுகிறது. இதற்கு ஊட்டச்சத்து குறைவு காரணமாக கூட இருக்கலாம். இல்லையெனில் தூங்கும்போது ஏற்பட்ட அசைவினால் கூட உடலில் வலி ஏற்படலாம். மேலும் நாம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக முக்கியம்.

body pain
body pain

சரியான முறையில் உடற்பயிற்சி, மூச்சு பயிற்சி ஆகியவற்றை வழக்கமாக கொண்டிருக்க வேண்டும். நமது உணவு பழக்கமும் சரியான முறையில் இருப்பது அவசியம். உடலுக்கு சரியான உழைப்பு இல்லையென்றாலும் வலி ஏற்படும். சில இடங்களில் வலி எடுப்பதை அசால்ட்டாக எடுத்துக்கொள்ள கூடாது.

தலைவலி – தலைவலி பிரச்சனை நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் அடிக்கடி தலைவலி ஏற்படுவது சாதாரண விஷயம் அல்ல. சிலருக்கு சரியான தூக்கமின்மையால் தலைவலி ஏற்படும். அதிக நேரம் மொபைல் பார்ப்பது தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் இதனை சாதாரணமாக விட்டுவிட்டால் மூளை திசுக்களில் பிரச்சனை ஏற்படும். மேலும் இந்த தலைவலி கண்ணில் கோளாறை கூட ஏற்படுத்தி விடும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

வயிற்றுவலி – வயிற்றுவலி ஏற்படுவது சகஜம் தான். சிலருக்கு சாப்பாடு சேரவில்லை என்றால் வயிறு வலிக்கும். ஆனால் அடிவயிற்றுவலி உடல் இறுக்கம் தீவிரமாக உள்ளதால் ஏற்படுகிறது. மேலும் அடிவயிற்றில் வலி ஏற்பட்டால் வயிற்றுப்புண், கல்லீரலில் கல் போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது.

body pain
body pain

முதுகு வலி – முதுகுவலி தற்போது அனைத்து வயதினரையும் தாக்குகிறது. இந்த முதுகு வலி தூங்கும்போது கொழுப்பணுக்கள் சேருவதால் ஏற்படுகிறது.  முதுகுவலி அதிகமாக ஏற்பட்டால் பக்கவாதத்தை கூட ஏற்படுத்துமாம்.

கால் வலி – காலில் வலி ஏற்படுவதற்கு முக்கியம் காரணம் உடலில் ஏற்படும் அழுத்தம், அதிக உடல் பருமன் போன்றவையே காரணம். மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகம் ஏற்படும். இதனை சாதாரணமாக விடுவதால் தான் 40 வயதை தாண்டியதும் மூட்டுவலி ஏற்படுகிறது. எந்த வலியாக இருந்தாலும் அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது மருத்துவரை அணுகுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here