ஊரடங்கிற்கு பிறகு காரை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம்..? விற்பனை டாப் கியரில் செல்லும் என எதிர்பார்ப்பு..!

0

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு பலரது வீடுகளில் புதிய கார்கள் நிற்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய கார்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் பொருளாதாரம் கடும் பாதிப்பு..!

கொரோனா வைரஸ் உயிர் பலி வாங்கி வருவதுடன் பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் தற்போது ஊரடங்கு உத்தரவை அமலுக்கு கொண்டு வந்துள்ளன.

இந்தியாவில் விமான சேவை எப்போது தொடங்கும் – புதிய அறிவிப்புகள்..!

இதனால் பல்வேறு விதமான தொழில்கள் முடங்கி போயுள்ளன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வாகன விற்பனை சரிவு..!

பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவின் வாகன விற்பனை சரிவை சந்தித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2020 காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில் பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா 12.04 சதவீத சரிவை சந்தித்துள்ளது.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் ஜனவரி-மார்ச் மொத்தம் 2,482 பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களை பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா டெலிவரி செய்துள்ளது

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம்..!

பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 2,365. அதே சமயம் மினி இந்தியா விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 117.

நடப்பு காலண்டர் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் ஒட்டுமொத்தமாக 2,482 வாகனங்களை பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா விற்பனை செய்துள்ளது.

கடந்த ஆண்டை விட சரிவு ..!

கடந்த 2019ம் ஆண்டின் இதே கால கட்டத்தில் ஜனவரி-மார்ச் வரையில் பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா 2,822 வாகனங்களை டெலிவரி செய்திருந்தது. இது 12.04 சதவீத வீழ்ச்சியாகும். அதே நேரத்தில் பிரிமீயம் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில், பிஎம்டபிள்யூ மோட்டோராடு நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

முன்னணி நிறுவனங்களும் சரிவு..!

இந்தியாவை பொறுத்தவரை பிஎம்டபிள்யூ மட்டுமல்லாது மாருதி சுஸுகி மற்றும் டாடா போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

ஊரடங்கிற்கு பிறகு நல்ல விற்பனையாகும் என எதிர்பார்ப்பு..!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தி கொள்ளப்பட்ட பிறகு வாகனங்களின் விற்பனை மீண்டும் டாப் கியரில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்து விற்பனைக்கு வரும் டாப் 5 பைக்குகள் – குஷியில் பைக் பிரியர்கள்..!

ஏனெனில் கொரோனா அச்சம் காரணமாக பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை மக்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு பதிலாக கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணிப்பதை அவர்கள் பாதுகாப்பானதாக கருதலாம்.

இதனால் விற்பனையை மீண்டும் மீட்டெடுத்து விட முடியும் என்ற நம்பிக்கையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here