அரசு பேருந்துகளில் 2 புதிய சேவைகள்…, அதிகாரப்பூர்வ வெளியிட்ட பெங்களூர் போக்குவரத்து கழகம்!!

0
அரசு பேருந்துகளில் 2 புதிய சேவைகள்..., அதிகாரப்பூர்வ வெளியிட்ட பெங்களூர் போக்குவரத்து கழகம்!!
அரசு பேருந்துகளில் 2 புதிய சேவைகள்..., அதிகாரப்பூர்வ வெளியிட்ட பெங்களூர் போக்குவரத்து கழகம்!!

தமிழகத்தை போல, கர்நாடகாவிலும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மேலும், இரண்டு சிறப்பு வசதிகளை பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழகம் (BMTC) அறிவித்துள்ளது. அதாவது, அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில், காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை ஒரு கட்டணமும், இரவு நேரங்களில் அதைவிட கூடுதல் கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், இரவு நேர பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதை அடுத்து அனைத்து நேரங்களிலும் இனி ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து, “நம்ம BMTC” என்ற செயலியை வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகப்படுத்த போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இந்த செயலில், அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்கள், நேரலை கண்காணிப்பு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற SOS அம்சம் உள்ளிட்டவைகள் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பரவி வரும் இந்த நோய்க்கு இதுதான் தீர்வு., சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here