தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அசோக் செல்வன், நடிகர் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனை இன்று திருமணம் செய்து கொண்டார். ‘ப்ளூ ஸ்டார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வந்த போது காதலில் விழுந்த அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியனின் திருமணம் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
திருநெல்வேலியில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இரு வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர். இப்படி இருக்க, அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணப் பரிசாக ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரயில் ஒலிகள்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.