நடிகர் சிம்புவை தாக்கிய சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.., கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!!

0
நடிகர் சிம்புவை தாக்கிய சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.., கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!!
நடிகர் சிம்புவை தாக்கிய சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.., கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்!!!

நடிகர் சிம்புவை பற்றி சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்ட தகவல் சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சிம்பு – ப்ளூ சட்டை மாறன்:

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் கிட்டத்தட்ட 50 கோடி வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி கூறும் விதமாக சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிம்பு பேசியதாவது, ” நான் நடித்த முந்தைய படங்களில், என்னுடைய உருவத்தை வைத்து கேலி செய்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக தனது உடம்பை கடுமையான உடற்பயிற்சி மூலம் கம்மி செய்துள்ளேன். இனிமேல் யாரும் உருவத்தை வைத்து கிண்டல் செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளார். சிம்பு சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாக தாக்கியுள்ளார். இதற்கு முன்பு வெளிவந்த படங்களை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் சிம்பு விமர்சித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

‘வெந்து தணிந்தது காடு’ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த கெளதம் மேனன் – பெட்டியில்  நடந்த  சலசலப்பு!!

அந்த பதிவில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த தம் படத்தில் இடம்பெற்ற கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா பாடலில், வாடி பொட்ட புள்ள வளைஞ்சு நெளிஞ்சி போற புள்ள, உன் கற்பு போகும்படி இப்போ என்ன ஆச்சு என்ற பாடல் வரிகளை பதிவிட்டு பெண்களின் உருவத்தை வைத்து நீங்கள் மட்டும் கேலி செய்யலாமா? என்பது போன்று சிம்புவை தாக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வரிகளுக்கு முதலில் சிம்புக்கு அர்த்தம் தெரியவில்லையா என்பதை போன்றும் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவால் சிம்பு ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here