இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர் மாற்றம் செய்வது தொடர்பான மத்திய அரசின் முடிவு நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. இருப்பினும் இந்த மாற்றத்தை அமல்படுத்தும் நடவடிக்கையாக கடந்த ஜி20 மாநாட்டின் போது, பிரதமர் மோடி அமர்ந்திருந்த இருக்கையில் ‘பாரத்’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இப்படி இருக்க, இந்தியாவின் மிகப்பெரிய பர்சல் சேவை நிறுவனமான ப்ளூ டார்ட் தனது பெயரை பாரத் என்று மாற்றுவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில், ப்ளூடார்ட் நிறுவனத்தில் தற்போது மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்த பணியின் ஒரு பகுதியாக ப்ளூ டார்ட் நிறுவனத்தின் டார்ட் பிளஸ் சேவை ‘பாரத் டார்ட்’ என்று பெயர் மற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.