தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம்..! எங்கே தெரியுமா??

0

கருப்பு பூஞ்சை பரிசோதனை மையம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. அங்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெறுவதற்கு 120 படுக்கைகள் அமைக்கப்ட்டுள்ளன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவிக் கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க கருப்பு பூஞ்சை எனும் புதிய தொற்று பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.  இது மக்களிடையே அதிமாக பரவுவது முதல்முறை என்பதால் இந்த தொற்றுநோய் பற்றிய ஏராளமான தவறான கருத்துக்களும் பரவி வருகின்றன.

இந்த கருப்பு பூஞ்சை நோய் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “தமிழகத்தில் 518 பேருக்கு கரும்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கரும்பூஞ்சை நோயால் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது கரும்பு பூஞ்சை பரிசோதனை மையம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது”. இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர், “இனி படிப்படியாக தமிழகத்தில் மாவட்டந்தோறும் மருத்துவமனைகளில் கரும்பூஞ்சை சிகிச்சை மையம் அமைக்கப்படும்” என்று மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here