கொரோனா நோயாளிகளை தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’ – சிகிச்சைக்கு தேவையான மருந்து இல்லை என அறிவிப்பு!!!

0
கொரோனா நோயாளிகளை தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’ - சிகிச்சைக்கு தேவையான மருந்து இல்லை என அறிவிப்பு!!!
கொரோனா நோயாளிகளை தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’ - சிகிச்சைக்கு தேவையான மருந்து இல்லை என அறிவிப்பு!!!
கர்நாடகாவில் கொரோனா தொற்று பாதித்த மூன்று நோயாளிகளை கருப்பு பூஞ்சை தொற்று பாதித்துள்ளது. அந்த நோயாளிகளில் ஒருவர் அரசு மருவமனையிலும் மற்ற இருவர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கருப்பு பூஞ்சை தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் ஆம்போடெரிசின் என்ற மருந்து தற்போது தங்களிடம் இல்லை எனவும், இது சம்மந்தமாக மாநில சுகாதார அமைச்சகத்திற்கு தகவல் அளித்துள்ளதாவும் அம்மாவட்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 இன் கொடிய இரண்டாவது அலை இந்தியாவைத் தாக்கி வரும் இந்நிலையில், கோவிட் -19 நோயிலிருந்து மீண்ட மற்றும் மீண்டுகொண்டிருக்கும் நோயாளிகளை மியூகோமிகோசிஸ் எனப்படும் “கருப்பு பூஞ்சை” என்ற அரிய நோய்த்தொற்று பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.இந்த மியூகோமிகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை பாதிப்பு, பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது.முதன் முதலில் டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், மும்பை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே ஆகிய ஐந்து நகரங்களில் பணிபுரிபவர்கள் 58 பேருக்குப் இத்தகைய தொற்று பதிவாகியுள்ளது.

கொரோனா நோயாளிகளை தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’ - சிகிச்சைக்கு தேவையான மருந்து இல்லை என அறிவிப்பு!!!
கொரோனா நோயாளிகளை தாக்கும் ’கருப்புப் பூஞ்சை’ –

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

இவர்களில் பெரும்பாலானோர், கோவிட் -19 லிருந்து மீண்டவர்கள் என்பது குறுப்பிடத்தக்கது.பொதுவாக, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படும். கொரோனாவிலிருந்து மீண்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் ஏற்படுகிறது. தற்போது கர்நாடகாவில் இந்த கருப்புப் பூஞ்சை தொற்றால் நோயாளிகள் பாதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here